கோடையில் மின் தடை இருக்காது!

கோடையில் மின் தடை இருக்காது!

கோடைகாலத்தில் மின்சார தடை இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மின் நுகர்வு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதால், இந்த கோடையில் மின் தடை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்ஃபோன் செயலியில் புகாரளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com