Samsung workers strike
சாம்சங் தொழிலாளர் போராட்டம்

சாம்சங் விவகாரம்- கோட்டையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

Published on

சென்னையை அடுத்து உள்ள சாம்சங் தொழிற்சாலையில் சங்கம் அமைப்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு வாரங்களாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்தது. 

அவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் தி.மு.க.வின்தொழிற்சங்கம் உட்பட அனைத்து சங்கங்களின் கூட்டுப் போராட்டமும் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து, தொழிலாளர்கள், நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை என முத்தரப்புப் பேச்சுவார்த்தை கோட்டையில் உள்ள தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது. மாலைவரை நீடித்த அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.     

logo
Andhimazhai
www.andhimazhai.com