தமிழ் நாடு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூலை தொடங்கிய இதமான பருவம் ஆகஸ்ட் தாண்டி தற்போதுவரை தொடர்கிறது. கோடையின் வெம்மையைப் போக்க குற்றாலத்துக்கு சுற்றுலா பயணம்செல்பவர்கள் இரண்டு மாதங்களாக அருவிக் குளியலை அனுபவித்து மகிழ்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில நாள்களாக மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இந்நிலையில் இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், முதன்மை அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பாக குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.