“கவலைப்பட்டதே கிடையாது...!” - சூப்பர் ஸ்டாரின் புத்தாண்டு வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்
Published on

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது, நடிகர் ரஜினியும் வெளியே வர, கூடியிருந்த ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ரஜினியும் உடனே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்தபிறகு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.

புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தான் நடித்த 'முத்து' படத்தில் உள்ள வசனத்தைப் பகிர்ந்து ரஜினி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com