மழை
மழை

7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுவையில் மேலும் 5 நாள்களுக்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமானவதுவரை மழை பெய்யக்கூடும் என்றும்,

வடகிழக்குப் பருவ மழை தீவிரமாகவே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தலைநகர் சென்னையில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10ஆம் தேதி நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு தென்கோடி மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com