களைகட்டும் தேர்தல்- 22இல் தி.மு.க. வடமண்டலக் கூட்டம்!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
Published on

தி.மு.க.வின் அடுத்த கட்ட வாக்குச்சாவடிப் பொறுப்பாளர் தயாரிப்புக் கூட்டமாக வரும் 22ஆம் தேதி திருவண்ணாமலையில் பாசறைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.  

மாவட்டத்தின் திருவண்ணாமலை ஒன்றியம், மலப்பாம்பாடி கிராமத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முந்தைய கூட்டங்களைப் போலவே இதிலும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

இதில், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, தருமபுரி கிழக்கு, மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் வடக்கு, தெற்கு ஆகிய தி.மு.க.வின் 13 கட்சியமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்; அவர்களை மாவட்டச்செயலாளர்கள் பங்கேற்கச்செய்ய வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, ஜூலை 26ஆம் தேதி திருச்சி, ஆகஸ்ட் 17 இராமநாதபுரம், செப்டம்பர் 24 அன்று காங்கயம் ஆகிய ஊர்களில் முறையே காவிரி டெல்டா, தென்மண்டல, மேற்கு மண்டல தயாரிப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து வடக்கு மண்டலக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com