தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை!

chennai rain
சென்னை மழை(கோப்புப் படம்)
Published on: 

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதுகுறித்து, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"வட சென்னையில் தற்போது தொடங்கியுள்ள மழைப்பொழிவானது, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் பரவும்.

இன்று முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் திடீர் மழையாக, குறுகிய நேரத்திற்கு தீவிரமான மழையை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து, சிறிது நேரம் வெயிலுக்கும் வாய்ப்புள்ளது.

மாலையிலிருந்து இரவுவரை மழையின் தீவிரம் அதிகரித்து, அதிகாலைவரை தொடரும்.

மேலும், தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து தீவரமாக உள்ளது." என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com