தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

புதுவையில் போட்டியிடவில்லை -தமிழிசை திட்டவட்டம்!

புதுச்சேரியில் போட்டியிடமாட்டேன் என்று தமிழிசை செளந்தராரஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் துணைநிலை ஆளுநர் பதவிகளிலிருந்து தமிழிசை செளந்தராரஜன் இன்று காலை பதவிவிலகினார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பதவி விலகினார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு தமிழிசை அளித்தப் பேட்டியில், ”ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். அரசியலுக்கு வருவதற்குத்தான் பதவிவிலகினேன். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்தான் போட்டியிட உள்ளேன்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com