மாதிரிப் படம்: அரசுப் பேருந்து
மாதிரிப் படம்: அரசுப் பேருந்து

அரசுப் பேருந்து தொடர்பான புகார்களுக்கு புதிய எண் அறிவிப்பு!

அரசுப் பேருந்து தொடர்பான புகார்களை 149 எனும் புதிய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் “1800 599 1500” என்ற 11 இலக்க எண் கடந்த 09.03.2023 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது உபயோகத்திலிருந்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், வருகின்ற “10.11.2023” முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149) அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149-ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com