தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலி என அறிவிப்பு!

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி, நேற்று முன்தினம் பா.ஜ.க.வில் இணைந்தார்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு விஜயதரணி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டுமா என்பது சபாநாயகர் பரிசீலனையில் உள்ளது என பேரவை செயலாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com