இளையராஜா
இளையராஜா

மன்னர்கள் செய்ததை தற்போது பிரதமர் செய்திருக்கிறார்! – இளையராஜா புகழாரம்

“முன்பெல்லாம் மன்னர்கள் தான் கோயில்களை கட்டினார்கள். ஆனால் தற்போது பிரதமர் மோடி கோயிலை கட்டியுள்ளார்” என்று பிரதமருக்கு இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

தேனாம்பேட்டை நாரத கானா சபா அரங்கில் “சென்னையில் அயோத்தியா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இளையராஜா பேசியதாவது, “இன்றைய நாள் சரித்திரத்தில், உலகத்தில் முதல் முறையாக நடக்கின்ற நாள். என்றும் அழியா புகழை இந்த காரியத்தை முடித்த பிரதமர் மோடிக்கு தரும். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் முடியும்? யாராலையும் பண்ண முடியாது. இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்துபோனார்கள். யார்யார் வந்து போனார்கள், என்ன செய்தார்கள் என்று கணக்குப் பாருங்கள்.

யார் செய்தது அதிகம் என்று கணக்குப் பாருங்கள். மோடி செய்த இந்த காரியத்தை சொல்லும் போது கண்ணீர் வருகிறது.

அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இன்று இங்கு இருப்பது கொஞ்சம் வருத்தத்தைக்கொடுக்கிறது.

ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். முன்பெல்லாம் மன்னர்கள் தான் கோயில்களை கட்டினார்கள். ஆனால் தற்போது பிரதமர் மோடி கோயிலை கட்டியுள்ளார். இது இந்தியா முழுவதற்குமான கோயில்' என்று தெரிவித்துள்ளார்.

நம் இந்தியாவில் எத்தனை கோயில்கள் இருக்கின. அந்த கோயில்களை அந்த பகுதிகளை ஆண்ட மன்னர்கள்தான் கட்டியிருப்பார்கள். இந்தியா முழுமைக்கும் ஒரு கோயில் எழும்பியிருக்கிறது. பாண்டிய மன்னர்கள் மீனாட்சி கோயிலை கட்டினார்கள். அதேபோல், சோழ நாட்டில் ராஜராஜ சோழன் பிரகதீஷ்வரர் கோயிலை கட்டினான். அது உலக பிரசித்தி பெற்றது. ஒரு மன்னன் ஒரு சிறிய நாட்டில் கோயிலை கட்டினார். இந்தியாவிற்கு மொத்தமாக ராம பிரானுக்கு அவர் பிறந்த இடத்திலேயே கோயில் கட்டியதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு மன்னர் செய்ததை நம் பிரதமர் செய்திருக்கிறார்.” என்று இளையராஜா பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com