நா.த.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

NTK Seeman
நா.த.க. சீமான்
Published on: 

த.வெ.க. அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :

" தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா, அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில
ஒருங்கிணைப்பாளருமான முருக.சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.மதிவாணன் உட்பட்ட நாம் தமிழர் உறவுகளை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்து சிறைப்படுத்தியிருக்கும் த.வெ.க. அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 24-10-2026, சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று நாம் தமிழர் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com