ஆட்சிசெய்யத் தெரியவில்லை - சிறையிலிருந்து வெளிவந்த நா.த.க. கார்த்திகா தாக்கு

NTK karthika released
நா.த.க. வேட்பாளர் கார்த்திகா விடுவிப்பு
Published on: 

கோவை சிறையிலிருந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா இன்று காலையில் விடுதலை செய்யப்பட்டார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நா.த.க. வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்தது. பின்னர், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒன்பது பேருக்கும் ஜாமின் வழங்கக்கோரி, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டு இன்று காலை கோவை சிறையிலிருந்து கார்த்திகா விடுவிக்கப்பட்டார். அவருக்கு நா.த.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நா.த.க. வேட்பாளர் கார்த்திகா பேசியதாவது:

"தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் கடைசி நாளில் முதலமைச்சர் விஜய் மட்டும்தான் பரப்புரை செய்ய வேண்டும்; வேறு எந்தக் கட்சியும் பரப்புரை செய்யக்கூடாது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது ஒரு தீய சக்தி.

ஜனநாயகத்தின் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வாக்கு கேட்கும் உரிமை உள்ளது. அதை எப்படி அவர்கள் பறிப்பார்கள்?

தொகுதி முழுவதும் அந்தக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பரப்புரை செய்யக்கூடாது என்பது ஜனநாயக மீறல்.

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை மக்களை பெரும் பஞ்சத்திற்கு தள்ளும். இதற்கு என்ன பதில் உள்ளது?

ஆட்சியைக் கையாளத் தெரியாத நீங்கள், அரசியல் பழிவாங்கல் மூலமாக திசைதிருப்பப் பார்க்கிறீர்கள்.

'ஓம்சக்தி, பராசக்தி' என்றெல்லாம் இனி ஆட்சி நடத்த முடியாது; மக்களின் கேள்விகளுக்கும், போராட்டங்களுக்கும் பதில் கூற வேண்டும். ஆட்சி அதிகாரம் என்பது கோமாளிகளின் கைகளில் இருக்கக் கூடாது; அது மக்களுக்காகப் போராடும் போராளிகளிடம் கிடைக்க வேண்டும்." என்று கார்த்திகா கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com