மைக் சின்னத்தை அறிமுகம்செய்த சீமான்
மைக் சின்னத்தை அறிமுகம்செய்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் சின்னம் மைக் - சீமான் அறிமுகம்!

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காததால் அக்கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அதை மறுத்த நா.த.க. மாற்று சின்னங்களை ஒதுக்கக் கோரியது. நாம் தமிழர் கட்சியின் இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. அதையடுத்து, ஒதுக்கப்பட்ட மைக்- ஒலிவாங்கி சின்னத்திலேயே போட்டியிடுவதென நா.த. கட்சி முடிவுசெய்தது.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒலிவாங்கி சின்னத்தை அறிமுகப்படுத்தினார். 

ஆட்சிச் செயற்பாட்டு வரைவு என்ற பெயரிலான தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com