நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது!

கார்த்திகா, நாம் தமிழர் கட்சி
கார்த்திகா, நாம் தமிழர் கட்சி
Published on: 

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாவை கோவையில் இன்று போலீஸ் கைதுசெய்தது. 

இடைத்தேர்தல் தொடர்பான மூன்று வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக, முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்த பாதையில் அவர் பிரச்சாரம் செய்ததாகவும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. 

காவல்நிலையத்தை முற்றுகையிட்டதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

கோவையில் உள்ள கார்த்திகாவின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அவரின் கணவர் உட்பட ஆறு பேரைக் கைதுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com