எண்ணூர் கழிமுகப் பகுதியில் எண்ணெய்ப் படலம் அகற்றும் பணி
எண்ணூர் கழிமுகப் பகுதியில் எண்ணெய்ப் படலம் அகற்றும் பணி

எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய்ப் படலம் அகற்றும் பணி தொடக்கம்!

புயல் மழையின்போது எண்ணூர் கழிமுகப் பகுதியில் எண்ணெய்ப் படலம் சுமார் 20 சதுர கி.மீ. பரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணெய்க் கசிவை அகற்ற, தேவையான ஆட்கள், இயந்திரங்களை இறக்கிவிட்டு தமிழ்நாடு அரசு பணிகளைத் தொடங்கியுள்ளது.

மிதக்கும் எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் எண்ணெயை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து அகற்றப்படும் எண்ணெய் உட்பட அபாயகரமான கழிவுகளை கும்முடிப்பூண்டியில் உரிமம் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும் என்றும் 

இந்த எண்ணெய் அகற்றும் பணியை விரைவுபடுத்துவதற்காக மேலும் சில எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்களும், குறிப்பிட்ட சில இடங்களில் எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அருகிலுள்ள நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினால் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.

”தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை, தம்முடைய அலுவலர்களை அந்தப் பகுதியிலேயே நிறுத்திவைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் எண்ணெய்ப் படலத்தைக் கையாளும் மீட்புப் பணி மீனவர்
பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் எண்ணெய்ப் படலத்தைக் கையாளும் மீட்புப் பணி மீனவர்

இதே சமயம், இதில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு பாதுகாப்பான உபகரணங்கள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் இயக்கத்தினரும் மீனவர் அமைப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com