தீபாவளிக்கு நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை!

Tamilnadu government secretariat
தலைமைச் செயலகம்
Published on

இந்த ஆண்டில் தீபாவளிப் பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழன் அன்று வரும்நிலையில், மறுநாள் வெள்ளிக்கிழமையும் சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் முதல் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலக சங்கம் உட்பட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், வாரக் கடைசிக்கு முந்தைய நாளில் தீபாவளி வருவதால் அதையடுத்து உடனே பணிக்குத் திரும்புவதில் சிரமம் உள்ளதால், வெள்ளியன்றும் விடுமுறை அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com