சத்திய மூர்த்தி பவன்
சத்திய மூர்த்தி பவன்

இழுபறியோ இழுபறி... 7 தொகுதிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறியோ இழுபறி என இழுத்துக்கொண்டிருக்கிறது.

ஒருவழியாக, நேற்று நள்ளிரவில் ஏழு பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. 

அதன்படி, திருவள்ளூரில் விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.கோபிநாத், 
கரூரில் தற்போதைய அத்தொகுதி எம்.பி. ஜோதிமணி, கடலூரில் ஆரணியின் தற்போதைய எம்.பி. விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம்,
விருதுநகரில் மாணிக்கம் தாகூர்,
கன்னியாகுமரியில் விஜய் வசந்த் என காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

மயிலாடுதுறை, நெல்லை வேட்பாளர்கள் இன்னும் இறுதியாகவில்லை. 

தமிழகம், புதுவையைப் பொறுத்தவரை, தி.மு.க. அணியில் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர் அறிவிப்பு இழுபறியாகத் தொடர்கிறது. 

தி.மு.க. கூட்டணி மற்றும் அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தன் பிரச்சாரத்தைத் தொடங்கி இரண்டு ஊர்களில் பிரச்சாரத்தையும் நடத்தி முடித்துவிட்டார். இன்னும் காங்கிரஸ் தன் முழுமையான பட்டியலை வெளியிடாமல் வைத்திருப்பது அக்கூட்டணியில் உற்சாகக் குறைவை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com