ஜூலை 18,19இல் கட்டற்ற மென்பொருள் மாநாடு!

ஜூலை 18,19இல் கட்டற்ற மென்பொருள் மாநாடு!
Published on

கணினி உலகத்தில் தனித்த இடம்வகிக்கும் கட்டற்ற, இலவச மென்பொருள் இயக்கம் தமிழ்நாட்டிலும் ஒருபக்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கட்டற்ற மென்பொருள் மாநாடு சென்னையை அடுத்த செம்மஞ்சேரி செயிண்ட் ஜோசப் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வரும் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

இந்த - TOSSConf25 என்ற தமிழ்த் திறந்த மூல மாநாட்டில், முதல் நாளன்று பயிற்சிப் பட்டறைகளும் அடுத்த நாளில் உரைகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலைவரை தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடைபெறும்.

கணியம் அறக்கட்டளை, இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை காஞ்சி லினக்ஸ் பயனர் குழு, சென்னை ஒருங்கிணைந்த கட்டற்ற மென்பொருள் குழு, பயிலகம், சென்னை பைதான் பயனர் குழு, Software Freedom Law Center, India ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.


FOSS (Free and Open Source Software)-ஐத் தழுவிய ஒவ்வொருவருக்கும் stall அமைக்க அழைப்பு விடுக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, https://tossconf25.kaniyam.com/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com