முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்த எம்.பி.கள் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. உட்பட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக கூறியுள்ளன.
”த.வெ.க. அரசு, மேகதாது அணை தொடர்பாக கலந்தாலோசிக்காமல், அதை திசைத்திருப்ப நடத்தும் நாடகம்தான் இந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்த எம்.பி.கள் கூட்டம். இதனால், திமு.க. இந்த கூட்டத்தில் பங்கேற்காது.” என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் நிலையை அறிய அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரையிடம் கேட்டபோது, "கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது; நாங்கள் அதை புறக்கணிக்க உள்ளோம்." என்று கூறினார்.
மேலும், பா.ம.க., மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க., ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளும் என்று தெரிவித்துள்ளன.
மொத்தம் உள்ள 57 எம்.பி.களில், 20 எம்.பி.கள் பங்கேற்கும் சூழல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.