மெட்ரோவில் பெண்களை இழிவுபடுத்தி இப்படி விளம்பரம் செய்யலாமா?

மெட்ரோவில் பெண்களை இழிவுபடுத்தி இப்படி விளம்பரம் செய்யலாமா?
Published on

எப்படியாவது மக்களின் கவனத்தை ஈர்த்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் செய்யப்படும் விளம்பரங்கள், சில சமயங்களில் சர்ச்சைக்கும் உள்ளாகிவிடுவது உண்டு.

அப்படி, சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் ஒட்டப்பட்டுள்ள ஒரு விளம்பரம், சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் கண்ணன், தன் சமூக ஊடகப் பக்கத்தில், மெட்ரோ ரயில் விளம்பரம் பெண்களை இழிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

”சென்னை மெட்ரோ ரயிலில் இப்படி ஒரு விளம்பரம் நியாயமா?

முதலாளித்துவம் பெண்ணை ஒரு போக பொருளாக, விளம்பரப் பொருளாக, முன்னிறுத்துகிறது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.

பெண் நண்பரால் ஆதாயம் இல்லை வட்டியால் ஆதாயம் என ஏன் ஒப்பிடுகிறீர்கள்? உடனடியாக விளம்பரத்தை மெட்ரோ எடுத்திட வேண்டும்.இல்லையேல் போராடுவோம்.

பணம் கிடைத்தால் என்ன வேண்டுமானால் விளம்பரத்தில் குறிப்பிடலாமா?” என முதலமைச்சர் அலுவலகத்தையும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தையும் இணைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com