ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பலாப்பழம்!

இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 6 பன்னீர் செல்வங்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து இராமநாதபுரத்தில் தானே போட்டியிடுகிறார். சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதில் அவர் உறுதியாக இருந்தார்.

இதனிடையே, அவருடைய பெயரைப் போலவே முன்னெழுத்துடன் கூடிய ஐந்து பன்னீர்செல்வங்களும் இத்தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலா பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

திருமங்கலத்தைச் சேர்ந்த ஒ.பன்னீர் செல்வம், த/பெ ஒச்சத்தேவர் என்பவருக்கு வாளி சின்னமும்,

இராமநாதபுரம், ஒ.பன்னீர் செல்வம் த/பெ ஒய்யாரம் என்பவருக்கு கண்ணாடி டம்ளர் சின்னமும்,

இராமநாதபுரம், ம.பன்னீர் செல்வம் த/பெ மலையான்டி என்பவருக்கு பட்டானி சின்னமும்,

மதுரை ஒ.பன்னீர் செல்வம் த/பெ ஒய்யாத்தேவர் என்பவருக்கு திராட்சை சின்னமும்,

உசிலம்பட்டி ஒ.பன்னீர் செல்வம் த/பெ ஒச்சப்பன் என்பவருக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இந்த பெயர்கள், சின்னங்கள் போட்டியால், கிடைக்கக்கூடிய வாக்குகளும் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சவாலை அவர் எதிர்கொண்டு அதிக வாக்குகளைப் பெறுவார் என அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com