தமிழ் நாடு

முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனியாக இருந்துவருகிறார். அவரை பா.ஜ.க. அணிக்கு வரும்படி தினகரன் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இப்போதைய நிலையில் பிரிந்திருக்கும் அ.தி.மு.க. சக்திகள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்பதுதான் தலையாய கோரிக்கையாக இருக்கிறது என்றார் பன்னீர்.
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டதற்கு, ஒரு விரலை வானத்தை நோக்கிக் காட்டிய அவர், ஆண்டவனிடம்தான் அது இருக்கிறது என்றார்.