எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த ஓபிஎஸ்

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த ஓபிஎஸ்
Published on

திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். சட்டப் போராட்டமும் ஓபிஎஸ்ஸுக்கு பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் ஓபிஎஸ் இணைந்தார்.

ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்துக்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகியோர் பேரவை செயலாளரை நேரில் சந்தித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்.

ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐயப்பன் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com