அரசுப் பேருந்திலிருந்து கழன்று விழுந்த இருக்கை
அரசுப் பேருந்திலிருந்து கழன்று விழுந்த இருக்கைகோப்பகப் படம்

அரசுப் பேருந்துகளை அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வுசெய்ய உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வுசெய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 23 ஆம் தேதி காலை ஸ்ரீரங்கம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்தது. இந்த விபத்தில், பேருந்தில் நடத்துநரான எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 54) சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். போதிய அளவில் பேருந்து பராமரிக்கப்படாததே இத்தகைய விபத்திற்குக் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வுசெய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆய்வறிக்கையை போக்குவரத்துச் செயலாளருக்கு சமர்ப்பிக்க போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com