
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
”தான் பார்த்துப் பார்த்து கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவில் கருணாநிதி கலந்துகொள்ள முடியாதபோது, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்” என்று சொன்னார்.” எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,
”சென்னை மெட்ரோவின் உருவாக்கத்தில் கழக அரசின் இடமும் அத்தகையதுதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்!” என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.