பிரேமலதா
பிரேமலதா

பத்ம பூஷண் விஜயகாந்துக்கு காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது! – பிரேமலதா

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது என்று பிரேமலதா கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பத்ம விபூஷன் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, நேற்று இரவு விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் அலைபேசியில் அழைத்து தெரிவித்தார்கள். நன்றி மட்டும் சொன்னேன். இப்போது சொல்கிறேன், காலம் கடந்து, காலம் எடுத்து சென்ற பிறகு கிடைத்த இந்த விருது கெளரமான விருது. இந்த விருது விஜயகாந்த் இருந்தபோதே கிடைத்திருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருப்போம். விஜயகாந்த் மறைந்து 30 நாள்களுக்குப் பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது.

விஜயகாந்த் மீது அன்பு வைத்திருப்பவர்களுக்கு இந்த பத்ம பூஷண் விருதை சமர்ப்பிக்கிறோம் என்று அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com