
2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:
பத்மஸ்ரீ விருது
மொத்தம் 45 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி, திருவாரூரை சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவத்சலம், புதுச்சேரி சிலம்ப கலைஞர் பழனிவேல், சேலத்தை சேர்ந்த வெண்கல சிற்பி கலியப்ப கவுண்டர் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.