எடப்பாடி குறிப்பிட்ட பழைய தீர்மானம்; கறாராகப் பேசிய சபாநாயகர்!

PRABHAKAR SPEAKER OF THE ASSEMBLY
பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்
Published on

சட்டப்பேரவையில் இன்று கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாவதங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க. குழுவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“ காவிரி நதி நீர்ப் பிரச்னை, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்து தண்ணீரின்றி தவித்துவரும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற இரண்டு விஷயங்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளோம்.

நடுவர் மன்றம் குறித்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட அரசின் தனித் தீர்மானத்தில் உள்ள வாசகத்தின் அடிப்படையில்தான் நாங்கள் ஒப்புதலுக்கு முன்மொழிந்தோம்.

ஆனால், முதல்வர் கூறிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான இடைத்திருத்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:

“கடந்த முறை, தமிழக முதல்வர் அரசின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் மூலமாக அன்று காலை ஒரு திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

அந்தத் திருத்தத்தை முறையாக ஆய்வு செய்து, அந்தத் திருத்தம் குறித்த வாக்கெடுப்பிற்கு முன்னர் திருத்தப்பட்ட திருத்தங்களோடு இந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படுவதாகக் நான் கூறினேன்.

உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க மூன்று வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் திருத்தம் தொடர்பாக பேசும்போது குறுக்கிட்டு உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம்.

திருத்தம் மேற்கொண்ட பிறகு முதல்வர் சார்பில் குறிப்பிட்ட போது நீங்கள் எதிர்த்திருக்கலாம். வாக்கெடுப்பிற்குப் பிறகு ஏகமனதாக நிறைவேற்றுவதாகக் குறிப்பிடும்போதும் உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கலாம். ஆனால், அப்போதும் நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஏகமனதாக நிறைவேற்றிய பிறகு, அந்தத் தீர்மானம் குறித்து பேச அனுமதிக்க முடியாது.” என்று பேரவைத் தலைவர் பிரபாகர் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com