பஞ்சு மிட்டாய் வியாபாரிகள்
பஞ்சு மிட்டாய் வியாபாரிகள்

புற்றுநோய் ஆபத்து- பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 

”பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரோடமைன்-பி Rhodaminbe.B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார். 

எனவே, ”உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல். பொட்டலமிடுதல் இறக்குமதி செய்தல் விற்பனை செய்தல் திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றும் அமைச்சர் மா.சு. தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com