தமிழ் நாடு
தமிழகத்தில் வரும்ஏப்ரல் 19ஆம்தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தில்லியில் சற்றுமுன் இதைத் தெரிவித்தார்.
நாடளவில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இன்று முதலே தேர்தல் அறிவிக்கை நடைமுறைக்கு வந்துவிட்டது.
வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 27.
வேட்புமனுவைப் பரிசீலிக்கும் நாள்- மார்ச் 28.
மனுவைத் திரும்பப்பெறக் கடைசி நாள் - மார்ச் 30.