அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

திமுகவின் மக்களவைத் தேர்தல் குழு: உதயநிதி, பிரியாவுக்கு இடம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள தி.மு.க. மூன்று குழுக்களை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில், டி.கே.எஸ் இளங்கோவன், விஜயன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார், அப்துல்லா, எழிலன் நாகநாதன், மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்து இருக்கிறார். அக்குழுவில் கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, எ.வ வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

மேலும், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட டி.ஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் கே.என் நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் திமுக தனது மக்களவை தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்தியுள்ளது தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com