
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இன்று தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி தலைமையில் பாமக இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சேலம் வந்த ராமதாஸ், கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு தனக்கு அதிகாரம் வழங்கும் என்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸை தலைவராக தேர்வு செய்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதையும் அங்கீகரித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கம்செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.