ஆன்லைன் பட்டாசு மோசடி.. உ ஷாரா இருங்க மக்களே... அமைச்சர் கீர்த்தனா

Diwali
தீபாவளி
Published on: 

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறைந்த விலை, சிறப்பு சலுகைகள் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அறிமுகமில்லாத இணையதளங்களில் முன்கூட்டியே பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள், அழைப்புகள், இணைப்புகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் பொருட்களை வாங்குங்கள்.

சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

பண்டிகைக் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுவோம்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com