தமிழ் நாடு

பிரதமர் மோடி இன்று திருச்சிக்கு வரவுள்ள நிலையில், மைய அமைச்சர் பியூஸ் கோயல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முற்பகலில் சந்தித்துப் பேசினார்.
இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கோயல், தங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறினார்.
வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றும் 50 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ள முதலமைச்சர் குடும்பத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றும் முதலமைச்சர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலினை அகற்றிவிட்டு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியில் அமர்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.