நெல்லை பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி
நெல்லை பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி

நெல்லையில் மோடி- அதே பிரச்சாரம், அதே சாட்டு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் மோடியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. 

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகில் அகஸ்தியம்பட்டியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாலையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். முன்னதாக, கேரள மாநிலத்தில் அவர் பிரச்சாரம் முடித்துவிட்டு இங்கு வந்திருந்தார். 

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். 

தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மீண்டும் முன்வைத்தார். 

மேலும், முன்னர் பேசியபடியே, கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் தவறாக நடந்துகொண்டதன் பலனை தமிழக மீனவர்கள் அனுபவிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com