பிரதமர் மோடிதேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் வரும் 9ஆம் தேதி தமிழகத்துக்கு வருகிறார்.
அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் பொதுக்கூட்டத்தில் பேசும் அவர், வாகன உலாவும் செய்கிறார்.
பின்னர் மாலை 6 மணிவாக்கில் சென்னை, தியாகராயர் நகரில் வாகன உலா போய் தென்சென்னை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசைக்கு வாக்கு கேட்கிறார்.
மறுநாள் காலை 11 மணிக்கு நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகனுக்காக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறார். மாலையில் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உட்பட மேற்குப் பகுதி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. அணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
மீண்டும் 13ஆம் தேதி தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அன்று காலையில் பெரம்பலூரிலும், 14ஆம்தேதி விருதுநகர் தொகுதியிலும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
முன்னதாக, இந்தத் தேர்தலை முன்னிட்டு மோடி தமிழகத்துக்கு ஐந்து முறை பிரச்சாரப் பயணமாக வந்துள்ளார்.