புதுச்சேரி கூட்டணி- பிரதமர் மோடி ஆலோசனை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முடிவாகாமல் முட்டுக்கட்டை ஆகிவிட்ட நிலையில், அங்கு தனித்துப் போட்டியிடுவதா என்ன செய்யலாம் என்பது குறித்து பா.ஜ.க. மேலிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் புதிய தலைவர் நிதின் நபி, புதுச்சேரி மாநில பா.ஜ.க. ஆகியோருடன் இன்று காலையில் ஆலோசனை நடத்தியுள்ளார். 

முன்னதாக, நேற்று மைய அமைச்சரும் புதுவை பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்திக்க முற்பகல்வரை காத்திருந்தார். ஆனால், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அவர் சந்திக்க வரவில்லை. 

ரங்கசாமியைப் பொறுத்தவரை லாட்டரி மார்ட்டினின் மகனுடைய லட்சிய ஜனநாயகக் கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது, புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவதாக உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் அசைந்துகொடுக்காததால் அவரும் கூட்டணியைவிட்டு வெளியேற முடிவுசெய்துவிட்டார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான், தனித்துப் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க. தீவிரமாக ஆலோசித்துவருகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com