மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரப் பேச்சு
மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரப் பேச்சு

'தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களு’- சித்திரை1-க்கு முன்கூட்டியே மோடி வாழ்த்து!

பிரச்சாரப் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று ஒரே நாளில் மூன்று தொகுதிகளில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

முதலில் காலையில் வேலூர், பிற்பகலில் கோவை, மேட்டுப்பாளையம் என பிரதமர் மோடி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்துவருகிறார். 

வேலூரிலும் கோவையிலும் தி.மு.க. மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதமர், அந்தந்த ஊர்ப் பெருமைகளையும் மறக்காமல் குறிப்பிட்டார். 

மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை, திருப்பூர் முருகானந்தம், பொள்ளாச்சி வசந்தராஜன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். 

அப்போது, விரைவில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடவுள்ள உங்களுக்கு என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களு என அவருக்கு வந்த தமிழில் குறிப்பிட்டார். முன்னதாக, வேலூரிலும் பேச்சின் தொடக்கத்திலேயே தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com