இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைக்கிறார் மோடி!

Illayaraja with PM Modi
பிரதமர் மோடியுடன் இளையராஜா
Published on: 

வரும் 11ஆம் தேதி இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

சென்னை – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக வரும் அவர், அன்று சென்னைக்கு வருகிறார்.

அதையொட்டிய அவரின் சென்னைப் பயணத் திட்டம் வெளியாகியுள்ளது.

அதன்படி, தில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, காலை 11.30 மணியளவில் பூந்தமல்லிக்குச் செல்கிறார்.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கி வைத்துவிட்டு, போரூர்வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்.

பின்னர், அங்கிருந்து சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்திற்கு வருகிறார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஷ்வரர் கோயிலில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த வளாகத்தில் உள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

கடந்த 2024ஆம் ஆண்டு, இசைஞானி இளையராஜா ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அண்மையில்தான் அதன் பணிகள் நிறைவடைந்தன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com