பிரதமர் மோடி சென்னையில் கார் உலா வாக்கு கேட்பு!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம்
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம்
Published on

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை தியாகராயர் நகரில் கார் உலா சென்று ஆதரவு திரட்டினார்.

அண்மையில், ஆறாவது முறையாக தமிழ்நாடு வந்திருக்கும் பிரதமர் மோடி இன்றும் நாளையும் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இன்று மாலையில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி பா.ஜ.க.வின் வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் மனோஜ் செல்வம், தென்சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக கார் உலா சென்றார்.

அவரின் இந்த கார் உலா, தியாகராயர் நகரின் பனகல் பூங்காவில் தொடங்கி ஒரு கிலோமீட்டருக்கு மேல் தேபாம்பேட்டைவரை சென்றது.

சாலையின் இருபுறம் நின்றிருந்த பா.ஜ.க. தொண்டர்கள், வட இந்தியர்கள் மலர் தூவி பிரதமரை வரவேற்றனர்.

பிரதமரின் இந்த கார் உலாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 3,500 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com