எடப்பாடியுடன் பிரதமர் மோடி சாலைவலம்!

எடப்பாடியுடன் பிரதமர் மோடி சாலைவலம்!
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று வாக்கு கேட்டார். 

இன்று மாலை 5 மணியளவில் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்த பிரதமர், அங்கிருந்து குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடைந்தார்.

நாகர்கோவிலில் அவர் ஒன்றரை கி.மி. தொலைவுக்கு சாலை வலம் மேற்கொண்டார். 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரும் அவருடன் வலம் வந்தனர். 

வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலைவரை பிரதமர் மோடி சாலை வலம் மேற்கொண்டார். 

வடசேரி அண்ணா சிலைக்கு அவர் மாலையும் அணிவித்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com