பூந்தமல்லி மெட்ரோ... பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

PM Modi - CM Vijay
பிரதமர் மோடி - முதல்வர் விஜய்
Published on: 

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வந்தார். அவரை முதலமைச்சர் விஜய் விமானநிலையத்திற்குச் சென்று வரவேற்றும், திருப்பியனுப்பியும் வைத்தார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்திற்காக பிரதமர் மோடி திறந்து வைத்த திட்டங்கள்:

1) சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடம்,

2) சென்னை துறைமுகத்தில் சரக்குகளைச் சேமிக்கும் தளம், 4 சரக்கு கிடங்குகள், மேம்படுத்தப்பட்ட கப்பல் சுற்றுலா முனையம், மாலுமிகள் மையம், நிலக்கரி கையாளும் மூன்றாவது தளம்,

3) விருதுநகர் மாவட்டம் வடுகப்பட்டி முதல் தெற்கு வெங்கானூர் வரையிலான 36 கி.மீ. நான்குவழிச் சாலை,

4) மதுரை சுற்றுச்சாலையில் 30 கி.மீ. தூரத்தில் நான்கு வழிச்சாலை,

5) காரைக்கால் - பேரளம் ரயில் பாதை,

6) கோவை, அதன் சுற்றுப்பகுதிகளில் 3 ரயில்வே மேம்பாலங்கள்,

7) அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்ட பழனி, வேலூர் கண்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ஆகிய 5 ரயில் நிலையங்கள்,

8) தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வளர்ச்சித் திட்டங்கள்.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய புதிய திட்டங்கள்:

1) நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி,

2)சென்னை மணலி சுத்திகரிப்பு ஆலையில், மசகு எண்ணெய் தயாரிப்பதற்கான திட்டம்,

3) தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள்,

4) காமராஜர் துறைமுகத்தில் கொள்கலன் முனையத்தின் முதல் கட்டம், இரண்டாம் நிலையில் துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிக்கும் பணி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com