அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை நடைபயணம்- முடியும் நாளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் வரும் ஜனவரியில் நிறைவு பெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

சென்னையில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், அண்ணாமலையே இத்தகவலைத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தேர்தல் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், வாக்குச்சாவடிக் குழுவில் பெண்களை அதிகமாக இடம்பெறச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். அப்படிச் செய்தால் வாக்குகள் மாறாமல் நமக்கு விழும் என்றும் அண்ணாமலை பேசியுள்ளார்.

மேலும், ”கூட்டணியிலிருந்து போகிறவர்கள் போகட்டும்; அது அவர்களின் விருப்பம். போகிறவர்களைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்? கூட்டணி தொடர்பாக தேசியத் தலைமையிடம் விரிவாகத் தெரிவித்துவிட்டேன். கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவுசெய்யும்.” என்றும் அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com