தங்கர் பச்சான், பாலு, திலக பாமா
தங்கர் பச்சான், பாலு, திலக பாமா

பா.ம.க. சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி!... வேட்பாளர் பட்டியல் வெளியீடு! - காஞ்சிபுரம் மிஸ்ஸிங்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தேவதாஸ், சேலம் தொகுதியில் அண்ணாதுரை, திண்டுக்கல் தொகுதியில் கவிஞர் திலகபாமா, மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், அரக்கோணம் தொகுதியில் வழக்கறிஞர் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி தொகுதியில் கணேஷ்குமார், விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதைபோல், காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com