'இன்று முதல் அரசியலில் இருந்து விலகுகிறேன்’ - மருத்துவர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

PMK Ramadoss
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
Published on

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அரசியலிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

தனது 88ஆவது பிறந்தநாளை இராமதாஸ் கொண்டாடிவருகிறார். பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று அவரைச் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், தனது மனைவி, மகனுடன் இராமதாஸ் கலந்துகொண்டார்.

அப்போது அவர், "எனது 88ஆவது பிறந்தநாளான இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். இனி அரசியல் பேசமாட்டேன்; அரசியலில் தலையிட மாட்டேன். பா. ம. க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்."என்று கூறினார்.

முன்னதாக, பா. ம. க.வின் தலைவராக தன்னை அறிவிக்கக்கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை இராமதாஸ் அண்மையில் வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 20 நாள்களாக தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தன்னைக் காண வருவோர் தன் உடல்நலத்தைப் பற்றி மட்டும் விசாரித்தால் போதும் என்றும் இராமதாஸ் குறிப்பிட்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com