உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்யத் தடை கோரியும், அவர் மீது பதிவுசெய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடுத்தது.

நண்பகல் 12 மணிக்கு நடைபெற வேண்டிய வழக்கு விசாரணை, ஆவணங்கள் இல்லாததால் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி இளந்திரையன் வழக்கை விசாரித்தார்.

கைதுசெய்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதி விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மேலும், உதயநிதியை ரிமாண்ட் செய்யும் யோசனை இல்லை என்றும் கூறினர்.

எந்த ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலோ, அவர்களை இழிவுபடுத்தும்வகையிலோ பேசவில்லை என்று உதயநிதியின் தரப்பில் கூறப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அழைத்தால் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உதயநிதிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com