பாக்யராஜுக்கு விஜய், அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

பாக்யராஜுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி
பாக்யராஜுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி
Published on

சென்னையில் இன்று காலமான இயக்குநர் பாக்யராஜுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

மருத்துவமனையிலிருந்து பாக்யராஜின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்ட சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், வி.சி.க. தலைவர் திருமாவளவன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, ம.நீ.ம. தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் எம்.ரவி, செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனின், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அறம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராகிம், ஏஐடியூசி மாநிலத் தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன், செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், வன்னியரசு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பா.ம.க. தலைவர் அன்புமணி உட்பட பலரும் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com