தேவாவுக்கு விஜய் நேரில் அஞ்சலி... அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு!

M.K.Stalin mourn at Deva's residence
தேவாவின் இல்லத்தில் ஸ்டாலின் துக்கம் அனுசரிப்பு
Published on: 

இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை இசையமைப்பாளரும், பாடகருமான தேவா மாரடைப்பால் காலமானார். இதைதொடர்ந்து, அஞ்சலி செலுத்துவதற்காக தேவாவின் உடல், அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பிரபலங்கள் ரஜினி, கமல் உட்பட்டோரும், திரையுலக பாடகர்கள் பலரும் தேவாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் இசையமைப்பாளர் தேவாவின் உடல் வைக்கப்பட்டிருந்த, அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையைச் சிறப்பிக்கும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு, தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

நாளை பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக இசையமைப்பாளர் தேவாவின் உடல் வைக்கப்படுகிறது.

பின்னர், அவரின் சொந்த ஊரான ஆற்காட்டிற்கு அருகேவுள்ள கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com