தமிழகத்தில் இன்று காலையில் தொடங்கி நடந்துவரும் வாக்குப்பதிவில் காலை 9 மணிவரை அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பொதுவாக, முதல் இரண்டு மணி நேரத்தில் 15 சதவீத அளவுக்கே வாக்குகள் பதிவாகும்.
இந்த முறை மக்களின் வாக்குப்பதிவு ஆர்வத்தைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் தம் குடும்பத்தினருடன் சென்னை, தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரில் மையத்தில் வாக்கு செலுத்தினார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளியில் தன்னுடைய வாக்கை அளித்தார்.
நா.த.க. தலைவர் சீமான் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யும் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.
முன்னதாக, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே வாக்குச்சாவடிக்குச் சென்று காத்திருந்து வாக்களித்தார், நடிகர் கார் ரேசருமான அஜித்குமார்.